நோக்கியா 110


நோக்கியா 110
x

நோக்கியா போன்களைத் தயாரிக்கும் ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் புதிதாக 110 மாடல் செல்போன் களை அறிமுகம் செய்துள்ளது. மெல்லியதான வடிவமைப்பைக் கொண்டுள்ள இந்த போனின் பின்புறம் கேமரா, எஸ்.டி. கார்டு, அதிகபட்ச நினைவகத் திறன் (32 ஜி.பி.) கொண்டதாக இது வந்துள்ளது. பொதுவாக ஸ்மார்ட்போனில் மட்டுமே யு.பி.ஐ. பேமென்ட் வசதி இருக்கும். ஆனால் இந்த செல்போனில் அதுபோன்ற வசதி அளிக்கப்பட்டுள்ளது. 1.8 அங்குல திரையைக் கொண்டது. எஸ் 30 பிளஸ் இயங்குதளம் உடையது. இதன் எடை 94.5 கிராம் ஆகும். 2-ஜி யில் செயல்படும் மாடலும் வந்துள்ளது.

4-ஜி 110 மாடல் விலை சுமார் ரூ.2,499.

2-ஜி 110 மாடல் விலை சுமார் ரூ.1,699.


Next Story