நோக்கியா ஜி 42


நோக்கியா ஜி 42
x

ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் நோக்கியா பிராண்ட் செல்போன்களைத் தயாரிக்கும் உரிமம் பெற்றுள்ளது. இந்நிறுவனம் தற்போது `நோக்கியா ஜி 42’ என்ற புதிய மாடல் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.

இதில் 6.56 அங்குல ஹெச்.டி. பிளஸ் திரை, ஆக்டாகோர் ஸ்நாப்டிராகன் அட்ரினோ 690 பிராசஸர் பயன்படுத்தப்பட்டுள்ளது. 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. நினைவகம் கொண்ட இதன் நினைவகத் திறனை 1 டி.பி. வரை விரிவாக்கம் செய்யலாம்.

இதில் ஆண்ட்ராய்டு 13 இயங்குதளம், இரண்டு சிம் கார்டு போடும் வசதி உள்ளது. பின்புறம் 50 மெகா பிக்ஸெல் கேமரா, முன்புறம் 8 மெகா பிக்ஸெல் கேமரா, பக்கவாட்டுப் பகுதியில் விரல் ரேகை உணர் சென்சார் உள்ளது. 5 ஆயிரம் எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி, விரைவாக சார்ஜ் ஆக வசதியாக 20 வாட் சூப்பர் வூக் சார்ஜரும் அளிக்கப்படுகிறது. இதன் விலை சுமார் ரூ.12,599.


Next Story