புதிய உச்சத்தில் தங்கம் விலை: சவரன் ரூ.95 ஆயிரத்தை கடந்தது.. இன்றைய நிலவரம் என்ன..?


புதிய உச்சத்தில் தங்கம் விலை: சவரன் ரூ.95 ஆயிரத்தை கடந்தது.. இன்றைய நிலவரம் என்ன..?
x

கோப்புப்படம்

தினத்தந்தி 16 Oct 2025 9:20 AM IST (Updated: 17 Oct 2025 11:56 AM IST)
t-max-icont-min-icon

தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகம் கண்டு வருவது இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை,

தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற-இறக்கத்தில் காணப்படுகிறது. அதிலும் கடந்த சில நாட்களாக தினமும் காலை மற்றும் பிற்பகலில் தங்கம் விலையில் மாற்றம் இருந்து வருகிறது. இதனால் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து வருகிறது. தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகம் கண்டு வருவது இல்லத்தரசிகளுக்கு மட்டுமல்ல சுப நிகழ்ச்சிகளை திட்டமிட்டு வைத்திருக்கும் குடும்ப தலைவர்களுக்கும் கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தங்கம் விலை எப்போது இறங்கும் என்பதே அவர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

கடந்த 7-ந்தேதி ஒரு சவரன் ரூ.90 ஆயிரத்தை தாண்டிய நிலையில், 8-ந்தேதி ரூ.91 ஆயிரம், 11-ந்தேதி ரூ.92 ஆயிரம் என உயர்ந்து இருந்தது. இதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,960 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.94 ஆயிரம் என்ற உச்சத்தையும் கடந்தது.

இதனையடுத்து நேற்றும் தங்கம் விலை ஏறுமுகத்தில் காணப்பட்டது. நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 825-க்கும், ஒரு சவரன் ரூ.94 ஆயிரத்து 600-க்கும் விற்பனை ஆனது. நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.35-ம், சவரனுக்கு ரூ.280-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 860-க்கும், ஒரு சவரன் ரூ.94 ஆயிரத்து 880-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் இன்றும் (வியாழக்கிழமை) தங்கம் விலை உயர்ந்து ஒரு சவரன் ரூ.95 ஆயிரத்தை கடந்துள்ளது. இதன்படி இன்று சென்னையில் ஆபரணத்தங்கம் விலை கிராமுக்கு ரூ.40 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.11,900-க்கும், சவரனுக்கு ரூ.320 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.95,200-க்கும் விற்பனையாகி வருகிறது.

வெள்ளி விலையும் நேற்று அதிகரித்திருந்தது. ஆனாலும் கடந்த ஒரு வாரத்துக்கு பிறகு அதன் ஏற்ற வேகம் சற்று குறைந்திருக்கிறது. கடந்த ஒரு வாரமாக தினமும் கிராமுக்கு ரூ.5-க்கு குறையாமல் விலை ஏற்றம் கண்டது. ஆனால் நேற்று கிராமுக்கு ரூ.1-ம், கிலோவுக்கு ரூ.1,000-ம் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.207-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 7 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் இன்று வெள்ளி விலை சற்று குறைந்துள்ளது. இதன்படி வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1-ம், கிலோவுக்கு ஆயிரம் ரூபாயும் குறைந்து, ஒரு கிராம் ரூ.206-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 6 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கடந்த 5 நாட்களில் தங்கம் விலை நிலவரம்:-

16.10.2025 ஒரு சவரன் ரூ.95,200 (இன்று)

15.10.2025 ஒரு சவரன் ரூ.94,880 (நேற்று)

14.10.2025 ஒரு சவரன் ரூ.94,600

13.10.2025 ஒரு சவரன் ரூ.92,640

12.10.2025 ஒரு சவரன் ரூ.92,000

11.10.2025 ஒரு சவரன் ரூ.92,000

1 More update

Next Story