சற்று ஆறுதல் அளித்த தங்கம் விலை.. புதிய உச்சத்தில் வெள்ளி விலை..! இன்றைய நிலவரம் என்ன..?


சற்று ஆறுதல் அளித்த தங்கம் விலை.. புதிய உச்சத்தில் வெள்ளி விலை..! இன்றைய நிலவரம் என்ன..?
x
தினத்தந்தி 10 Oct 2025 9:30 AM IST (Updated: 10 Oct 2025 9:53 AM IST)
t-max-icont-min-icon

தங்கம் விலை நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.91 ஆயிரத்து 400-க்கு விற்பனை ஆனது.

சென்னை,

தங்கம் விலை தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகிறது. கடந்த மாதம் (செப்டம்பர்) 23-ந்தேதி ஒரு சவரன் ரூ.85 ஆயிரத்தை தாண்டிய நிலையில், தொடர்ந்து உயர்ந்து வந்து நேற்று முன்தினம் ஒரு சவரன் ரூ.91 ஆயிரம் என்ற நிலையையும் கடந்து புதிய உச்சத்தை பதிவு செய்தது. இதன் தொடர்ச்சியாக நேற்றும் தங்கம் விலை உயர்வை கண்டது. காலையில் கிராமுக்கு ரூ.15-ம், சவரனுக்கு ரூ.120-ம், பிற்பகலில் கிராமுக்கு ரூ.25-ம், சவரனுக்கு ரூ.200-ம் அதிகரித்திருந்தது.

நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 385-க்கும், ஒரு சவரன் ரூ.91 ஆயிரத்து 80-க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.40-ம், சவரனுக்கு ரூ.320-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 425-க்கும், ஒருசவரன் ரூ.91 ஆயிரத்து 400-க்கும் விற்பனை ஆனது. நேற்றும் தங்கம் புதிய உச்சத்தை தொட்டு இருந்தது.

தங்கம் விலை

இந்நிலையில் இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. இதன்படி சென்னையில் ஆபரணத்தங்கம் விலை கிராமுக்கு ரூ.165 குறைந்து, ஒரு கிராம் ரூ.11,260-க்கும், சவரனுக்கு ரூ.1,320 குறைந்து, ஒரு சவரன் ரூ.90,080-க்கும் விற்பனையாகி வருகிறது.

வெள்ளி விலை

வெள்ளி விலையும் நேற்று கிராமுக்கு ரூ.7-ம், கிலோவுக்கு ரூ.7,000-ம் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.177-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 77 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் இன்று வெள்ளி விலை மேலும் அதிகரித்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இதன்படி வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3-ம், கிலோவுக்கு ரூ.3,000-ம் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.180-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 80 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கம் விலையை போல வெள்ளி விலையும் வரலாறு காணாத உச்சத்தை எட்டியிருக்கிறது.

அமெரிக்காவின் வர்த்தக போரால் அந்நாட்டு டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்துவருகிறது. இதனால் பங்குச்சந்தைகளில் முதலீடு செய்வது கணிசமாக குறைந்து, தங்கத்தின் மீதான முதலீட்டை அதிகரித்துள்ளது. இதனால் தங்கத்தின் விலை நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக மின்னல் வேகத்தில் உயர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

கடந்த 5 நாட்களில் தங்கம் விலை நிலவரம்:-

10.10.2025 ஒரு சவரன் ரூ.90,080 (இன்று)

09.10.2025 ஒரு சவரன் ரூ.91,400 (நேற்று)

08.10.2025 ஒரு சவரன் ரூ.91,080

07.10.2025 ஒரு சவரன் ரூ.89,600

07.10.2025 ஒரு சவரன் ரூ.90,400

06.10.2025 ஒரு சவரன் ரூ.89,000

1 More update

Next Story