வாடிக்கையாளர்களின் பணத்தை திருடி பங்குச்சந்தையில் வர்த்தகம்: ரூ. 4.58 கோடி இழந்த வங்கி மேலாளர்

தனியார் வங்கியில் மேலாளராக பணியாற்றி வந்தவர் ஷாக்ஷி குப்தா.
ஜெய்ப்பூர்,
ராஜஸ்தான் மாநிலம் கோடா மாவட்டத்தில் உள்ள தனியார் வங்கியில் மேலாளராக பணியாற்றி வந்தவர் ஷாக்ஷி குப்தா. இவர் வங்கியில் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்களின் பணத்தை திருடியுள்ளார். குறிப்பாக, முதியவர்கள், மொபைல் பேங்கிங் சேவையில் பழக்கம் இல்லாதவர்கள் உள்பட்டோரின் 110 வங்கி கணக்குகளில் இருந்து 4 கோடியே 58 லட்ச ரூபாயை திருடியுள்ளார்.
வாடிக்கையாளர்களின் செல்போன் எண்களை மாற்றியும், பாஸ்வேர்டுகளை மாற்றியும் இந்த பணத்தை திருடியுள்ளார். திருடிய பணத்தை இந்திய பங்குச்சந்தையில் வர்த்தகம் செய்துள்ளார். ஆனால், பங்குச்சந்தை வர்த்தகத்தில் திருடிய பணம் 4 கோடியே 58 லட்ச ரூபாயையும் இழந்த ஷாக்ஷி குப்தா நஷ்டம் அடைந்துள்ளார்.
வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருந்த வாடிக்கையாளர் தனது கணக்கில் இருந்த 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மற்றொரு வங்கி கணக்கிற்கு மாற்றப்பட்டது குறிது அறித்துள்ளார். இது குறித்து உயர் அதிகாரிகளிடம் அந்த வாடிக்கையாளர் புகார் அளித்துள்ளார். இந்த புகார் தொடர்பான விசாரணையில் வங்கி மேலாளர் ஷாக்ஷி குப்தா வாடிக்கையாளர்களின் வங்கி கணக்குகளில் இருந்து 4 கோடியே 58 லட்ச ரூபாய் வரை திருடி அதை பங்குச்சந்தை வர்த்தகத்தில் செய்து அனைத்தையும் இழந்தது தெரியவந்து. இதையடுத்து வங்கி மேலாளர் ஷாக்ஷியை போலீசார் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.






