அண்டை நாடுகளில் ரூபாயில் கடன்; மத்திய அரசிடம் அனுமதி கேட்கும் ரிசர்வ் வங்கி


அண்டை நாடுகளில் ரூபாயில் கடன்; மத்திய அரசிடம் அனுமதி கேட்கும் ரிசர்வ் வங்கி
x

முதல்கட்டமாக, அண்டை நாடுகளில் வசிப்பவர்களுக்கு ரூபாயில் கடன் வழங்கலாம் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

ரூபாயை சர்வதேசமயமாக்கும் மற்றொரு நடவடிக்கையை ரிசர்வ் வங்கி எடுத்துள்ளது. வெளிநாடுகளில் வசிப்பவர்கள் வர்த்தகம் செய்வதற்கு ரூபாயில் கடன் வழங்க இந்தியாவை சேர்ந்த வங்கிகளுக்கும், அவற்றின் வெளிநாட்டு கிளைகளுக்கும் அனுமதி கோரி மத்திய நிதி அமைச்சகத்திடம் விண்ணப்பித்துள்ளது.

முதல்கட்டமாக, அண்டை நாடுகளான வங்காளதேசம், பூடான், நேபாளம், இலங்கை ஆகிய நாடுகளில் வசிப்பவர்களுக்கு ரூபாயில் கடன் வழங்கலாம் என்று யோசனை தெரிவித்துள்ளது. இது வெற்றிகரமாக செயல்பட்டால், உலகம் முழுவதும் விரிவுபடுத்தலாம் என்று கூறியுள்ளது. இதன் மூலம், வர்த்தகத்தில் ரூபாயின் பயன்பாடு அதிகரிக்கும் என்று ரிசர்வ் வங்கி கருதுகிறது.

1 More update

Next Story