இந்தியாவில் மின்சார கார் தயாரிக்க ஆர்வம் காட்டாத டெஸ்லா

டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் தனது உற்பத்தியை தொடங்க வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது.
உலகின் பெரும் பணக்காரர் எலான் மஸ்குக்கு சொந்தமான 'டெஸ்லா' நிறுவனம் மின்சார கார்களை தயாரித்து வருகிறது. அந்நிறுவனம் இந்தியாவில் தனது உற்பத்தியை தொடங்க வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. ஆனால், இப்போதைக்கு டெஸ்லா நிறுவனம் கார் தயாரிப்பதாக தெரியவில்லை என்று மத்திய கனரக தொழில்துறை மந்திரி எச்.டி.குமாரசாமி தெரிவித்துள்ளார்.
டெஸ்லா நிறுவனம், இந்தியாவில் இன்னும் 2 அல்லது 3 மாதங்களில் தனது கார்கள் விற்பனையை தொடங்கும் என்று தெரிகிறது. அதற்காக மும்பையில் ஷோரூமுக்கு இடம் பார்த்து, 20-க்கு மேற்பட்ட ஊழியர்களை தேர்ந்தெடுத்து விட்டது. ஆனால், இந்தியாவில் உடனடியாக கார் தயாரிக்கும் திட்டம். டெஸ்லாவுக்கு இல்லை என்று தெரிகிறது.
Related Tags :
Next Story






