நாட்டின் கடன் வளர்ச்சி-வைப்பு நிதி வளர்ச்சி இடைவெளி அதிகரிப்பு

நாட்டின் கடன் வளர்ச்சி-வைப்பு நிதி வளர்ச்சி இடைவெளி அதிகரித்துள்ளது.
சென்னை,
நாட்டின் பொருளாதாரத்தை பாதுகாக்கும் காவலனாக மத்திய ரிசர்வ் வங்கி உள்ளது. பொருளாதாரத்தை உயிர்ப்புடன் வைத்திருக்க தன்னுடைய பணவியல் கொள்கைகளை பயன்படுத்தி வங்கிகளுக்கு கொடுக்கும் கடன் விகிதத்தை (ரெப்போ) இத்தாண்டு பிப்ரவரி மாதம் தொடங்கி 125 புள்ளிகள் வரை குறைத்துள்ளது.
தற்போது ரெப்போ விகிதம் 5.25 சதவீதமாக உள்ளநிலையில் பொதுமக்கள் வங்கிகளில் கடன் வாங்குவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆனால் இதற்கு நேர்மாறாக வங்கிகளில் வைக்கப்படும் வைப்புநிதிக்கான வட்டிவிகிதம் தொடர்ந்து குறைக்கப்பட்டு வருகிறது. இதனால் நாட்டில் கடன் வளர்ச்சி-வைப்பு நிதி வளர்ச்சி இடைவெளி அதிகரித்து வருகிறது.
கடன் வளர்ச்சி விகிதம் 16 சதவீதம்வரை அதிகரித்துள்ளநிலையில் வைப்பு நிதி விகிதம் 8 சதவீதமே உள்ளது. இதனால் வைப்புநிதிக்கு பதிலாக அதிக வட்டி தரும் பத்திரங்கள், பங்குச்சந்தை மற்றும் பரஸ்பர நிதி முதலீடுகளில் பொதுமக்கள் ஆர்வம் காட்ட தொடங்கியுள்ளதாக பிரபல தனியார் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.






