அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர கால அவகாசம் நீட்டிப்பு

மாணவர் சேர்க்கைக்கான கடைசிநாள் குறித்த அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
தமிழகத்தில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானதை தொடர்ந்து, அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கியது. இதன்படி இயந்திரவியல், மின்னியல் மற்றும் மின்னணுவியல், மின்னணுவியல் மற்றும் தொடர்பியல், கணினி பொறியியல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளுக்கான மூன்றாண்டு கால பட்டய படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடைபெற்றது.
இதனிடையே, தமிழ்நாட்டில் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர கால அவகாசம் நேற்று நிறைவடைந்தது. இந்நிலையில், அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர்வதற்கான கால அவகாசம் மேலும் நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர் சேர்க்கைக்கான கடைசிநாள் குறித்த அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் என தொழில் நுட்ப கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story






