குரூப்-4 தேர்வர்களுக்கு நற்செய்தி: கூடுதல் பணியிடங்கள் அறிவிப்பு


குரூப்-4 தேர்வர்களுக்கு நற்செய்தி:  கூடுதல் பணியிடங்கள் அறிவிப்பு
x

கூடுதலாக 727 காலிப்பணியிடங்களுக்கான பிற்சேர்க்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வு ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், வனக்காப்பாளர், மற்றும் வனக்காவலர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கான 3935 காலிப்பணியிடங்களை நிரப்ப ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு குரூப் 4 பணிகளுக்கான அறிவிக்கை தேர்வாணையத்தால் 25.04.2025 அன்று வெளியிடப்பட்டது. கூடுதலாக 727 காலிப்பணியிடங்களுக்கான பிற்சேர்க்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம், அறிவிக்கப்பட்ட மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 4662 ஆகும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story