சென்னை திருவொற்றியூரில் உள்ள கோவிலில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

சென்னை திருவொற்றியூர் பட்டினத்தார் கோவிலில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் சென்னை திருவொற்றியூர் அருள்மிகு பட்டினத்தார்கோவிலில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அலுவலக உதவியாளர், காவலர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இது குறித்த விவரம் வருமாறு:
பணியிடங்கள் விவரம்: அலுவலக உதவியாளர், சுயம்பாகி, காவலர், தோட்ட பராமரிப்பாளர் என 04 பணியிடங்கள் உள்ளன.
கல்வி தகுதி: சுயம்பாகி பணிக்கு தமிழில் படிக்கவும் எழுதவும் அறிந்திருக்க வேண்டும் மற்றும் கோவிலின் பழக்க வழக்கத்திற்கேற்ப நைவேத்யம் மற்றும் பிரசாதம் தயாரிக்கத் தெரிந்திருக்க வேண்டும். அலுவலக உதவியாளர் பணிக்கு 8-ஆம் வகுப்பு முடித்து இருக்க வேண்டும். இதர பணிகளுக்கு தமிழில் எழுத படிக்க தெரிந்தால் போதும்.
சம்பளம்: 11,600 - 36,800 வரை வழங்கப்படும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
உதவி ஆணையர் / செயலாளருக்கு, அருள்மிகு பட்டினத்தார் திருக்கோயில் அலுவலக இருப்பு, அருள்மிகு தியாகராஜசுவாமி திருக்கோயில், திருவொற்றியூர், சென்னை - 19 என்று தெளிவாக குறிப்பிட்டு விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 25.10.2025, மாலை 5.45 மணி வரை மட்டுமே பெற்றுக் கொள்ளப்படும். அதன் பின்னர் வரப்பெறும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
தேர்வு அறிவிப்பினை படிக்க: https://hrce.tn.gov.in/hrcehome/ajax/hppdf_view.php






