இஸ்ரோவில் வேலை: பி.இ/ பி.டெக் முடித்தவர்களுக்கு அருமையான வாய்ப்பு


இஸ்ரோவில் வேலை: பி.இ/ பி.டெக் முடித்தவர்களுக்கு அருமையான வாய்ப்பு
x

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவில் 39 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவில் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் என்பது பற்றிய விவரங்கள் பின்வருமாறு:-

பணியிடங்கள் விவரம் :

1. விஞ்ஞானி/பொறியாளர் (சிவில்) 18

2. விஞ்ஞானி/பொறியாளர் (மின்சாரம்) 10

3. விஞ்ஞானி/பொறியாளர் ( ரெப்ரிஜிரேஷன் & ஏர் கண்டிஷனிங்) 09

4. விஞ்ஞானி/பொறியாளர் (கட்டிடக்கலை) 01

5. விஞ்ஞானி/பொறியாளர் (சிவில்) தன்னாட்சி அமைப்பு [PRL] 01

என மொத்தம் 39 பணியிடங்கள் நிரப்ப்படுகின்றன.

கல்வி தகுதி : பி இ/ பி.டெக் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். துறை சார்ந்த பிரிவில் பாடம் எடுத்து படித்து இருக்க வேண்டும். 65 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி அவசியம்

வயது வரம்பு : 28 வயதுக்கு மிகாதவகள் விண்ணபிக்கலாம்.

சம்பளம் : ரூ.56.100 முதல்

தேர்வு முறை : எழுத்து தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவவார்கள். தமிழகத்தில் சென்னையில் தேர்வு நடைபெறும்.

விண்ணப்ப கட்டணம் : ரூ.750 செலுத்த வேண்டும். (ரூ.500 திருப்பிதரப்படும்)

விண்ணப்பிக்க கடைசி நாள் : 16.07.2025

தேர்வு அறிவிப்பினை படிக்க : https://www.isro.gov.in/ICRB_Recruitment10.html

1 More update

Next Story