3 ஆயிரம் பேர் பணி நீக்கம்: ஊழியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த ஆரக்கிள் நிறுவனம்


3 ஆயிரம் பேர் பணி நீக்கம்: ஊழியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த ஆரக்கிள் நிறுவனம்
x

representation image (Grok AI)

ஏஐ துறை ஆதிக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் டெக் துறையில் தொடர்ச்சியாக வேலை இழப்புகள் அதிகரித்து வருகிறது.

அமெரிக்காவைச் சேர்ந்த முன்னணி மென்பொருள் நிறுவனமான ஆரக்கிள் இந்தியாவில் சுமார் 3,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் நிறுவனம் ஆரக்கிள். இந்தியாவில் சென்னை, மும்பை, பெங்களூரு, ஐதராபாத், புனே, நொய்டா, கொல்கத்தா ஆகிய இடங்களில் இந்த நிறுவனத்தின் கிளை அலுவலகங்கள் உள்ளன. இந்த நிறுவனம் கடந்த ஆண்டு 28,824 பேரை புதிதாக பணியில் சேர்த்துள்ளது. .

இந்த நிலையில் அண்மையில் சாட்ஜிபிடியை தயாரித்த ஓபன் ஏஐ நிறுவனத்துடன் ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டது. இதையடுத்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் உயர் மட்ட அளவில் ஆலோசனை மேற்கொண்டது. இதையடுத்தே இந்த அதிர்ச்சிகர முடிவை எடுத்துள்ளது. அதாவது, இந்தியாவில் சுமார் 10%, சுமார் 3,000 ஊழியர்களை திடீர் பணிநீக்கம் செய்துள்ளது.

மென்பொருள் மேம்பாடு, கிளவுட் சேவைகள், வாடிக்கையாளர் ஆதரவு ஆகியவற்றில் பணியாற்றும் ஊழியர்களை இந்த பணி நீக்கம் கடுமையாக பாதித்துள்ளது. ஏஐ துறை ஆதிக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் டெக் துறையில் தொடர்ச்சியாக வேலை இழப்புகள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story