டெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்.!


டெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்.!
x
தினத்தந்தி 8 Sept 2025 9:59 AM IST (Updated: 10 Sept 2025 8:26 AM IST)
t-max-icont-min-icon

டெட் தேர்வு வரும் நவம்பர் 15 மற்றும் 16 தேதிகளில் நடைபெற உள்ளது.

சென்னை,

தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதித் தேர்வை (TET) ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தி வருகிறது. இந்நிலையில், 2025-ம் ஆண்டுக்கான டெட் தேர்வை அறிவிப்பு ஆகஸ்ட் மாதம் வெளியாகி, விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. இத்தேர்வை எழுத விரும்புகிறவர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க இன்றே (செப்டம்பர் 7) கடைசி நாள் ஆகும். இதற்கான தேர்வு வரும் நவம்பர் 15 மற்றும் 16 தேதிகளில் நடைபெற உள்ளது.

தேர்​வுக்கு விண்​ணப்​பிக்க விரும்​பும் இடைநிலை ஆசிரியர்​களும், பி.எட். முடித்த பட்​ட​தாரி ஆசிரியர்​களும் https://trb.tn.gov.in என்ற இணை​யதளம் வாயி​லாக ஆன்​லைனில் இன்று மாலை 5 மணிக்​குள் விண்​ணப்​பிக்க வேண்​டும். இடைநிலை ஆசிரியர் பயிற்சி பெறும் இறுதி ஆண்டு மாணவர்​கள், பி.எட். இறுதி ஆண்டு படிப்​பவர்​களும் டெட் தேர்​வுக்கு விண்​ணப்​பிக்​கலாம்.

அரசுப் பள்ளி மற்​றும் அரசு உதவி பெறும் பள்​ளி​களில் ஆசிரிய​ராக பணிபுரிய​வும், பதவி உயர்வு பெற​வும் டெட் தேர்​வில் தேர்ச்சி பெறு​வது கட்​டா​யம் என்று சென்னை உயர் நீதி​மன்​றம் பிறப்​பித்த உத்​தரவை உறுதி செய்து உச்ச நீதி​மன்​றம் சமீபத்​தில் தீர்ப்​பளித்​துள்​ளது. எனவே, ஆசிரியர்​கள் டெட் தேர்​வுக்கு விண்​ணப்​பிக்க வசதி​யாக கால அவகாசம் நீட்​டிக்​கப்​படலாம்​ என்று தெரிகிறது.

1 More update

Next Story