ஓடும் ரெயிலில் தீயணைக்கும் கருவியை இயக்கிய மர்மநபர்கள்... பீதியில் கீழே குதித்த பயணிகள்


ஓடும் ரெயிலில் தீயணைக்கும் கருவியை இயக்கிய மர்மநபர்கள்... பீதியில் கீழே குதித்த பயணிகள்
x

கோப்புப்படம் 

தினத்தந்தி 11 Aug 2024 6:59 PM IST (Updated: 11 Aug 2024 7:02 PM IST)
t-max-icont-min-icon

உத்தரபிரதேசத்தில் ஓடும் ரெயிலில் இருந்து பயணிகள் குதித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மொராதாபாத்,

மேற்கு வங்காளம் மாநிலம் ஹவுராவிலிருந்து பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் வரை ஹவுரா-அமிர்தசரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த ரெயில் இன்று உத்தரபிரதேச மாநிலம் மொராதாபாத் கோட்டத்தின் கீழ் உள்ள பில்பூர் ரெயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது, ரெயிலின் ஜெனரல் பெட்டியில் பயணம் செய்த மர்மநபர்கள் சிலர் திடீரென தீயணைக்கும் கருவியை இயக்கினர். இதனால் ரெயில் பெட்டி முழுவதும் கடும் புகைமூட்டம் சூழ்ந்தது.

இதன் காரணமாக, ரெயிலில் தீ விபத்து ஏற்பட்டுவிட்டதாக நினைத்த பயணிகள் சிலர் உடனடியாக ரெயிலை நிறுத்துவதற்காக அபாய சங்கிலியை பிடித்து இழுத்தனர். ரெயில் நிற்பதற்கு முன்பாகவே, வேகம் குறைந்து கொண்டு வந்தபோது, ரெயிலில் இருந்து கீழே குதித்தனர். இதில் 12 பயணிகள் காயமடைந்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து ரெயில்வே பாதுகாப்புப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story