18,510 அடி உயர மலை சிகரத்தில் ஏறி சாதனை படைத்த 13 வயது சிறுமி; உற்சாக வரவேற்பு


18,510 அடி உயர மலை சிகரத்தில் ஏறி சாதனை படைத்த 13 வயது சிறுமி; உற்சாக வரவேற்பு
x
தினத்தந்தி 24 Aug 2025 7:28 AM IST (Updated: 24 Aug 2025 11:00 AM IST)
t-max-icont-min-icon

எல்பிரஸ் சிகரத்தின் உச்சிக்கு சென்று திரும்பிய சிறுமி குல்கர்னிக்கு ஆரத்தி எடுத்து, மேள தாளங்களுடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

புனே,

ஐரோப்பியா மற்றும் ரஷியா நாடுகளில் உயரம் வாய்ந்த சிகரங்களில் ஒன்றான மவுண்ட் எல்பிரஸ் சிகரம், கடல் மட்டத்தில் இருந்து 18,510 அடி (5,641 மீட்டர்கள்) உயரத்தில் அமைந்துள்ளது.

இதில் முன்பு இரண்டு எரிமலைகள் இருந்துள்ளன. இந்நிலையில், மராட்டியத்தின் சட்டாரா நகரை சேர்ந்த தைரிய குல்கர்னி என்ற 13 வயது சிறுமி இந்த மலை சிகரத்தில் ஏறி சாதனை படைத்துள்ளார். பனி படர்ந்த அந்த மலை சிகரத்தில் கடும் குளிரிலும் தைரியத்துடன் உச்சிக்கு சென்றார்.

அவர் இந்தியாவுக்கு நேற்று திரும்பி வந்துள்ளார். அவருக்கு ஆரத்தி எடுத்து, இனிப்புகளை வழங்கி மேள தாளங்களுடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது அவருடைய பெற்றோரும் உடனிருந்தனர். சிறுமி குல்கர்னியை வாழ்த்தினர்.

இதுபற்றி குல்கர்னி செய்தியாளர்களிடம் கூறும்போது, நான் எல்பிரஸ் மலை சிகரத்தில் 10 நாட்களுக்கு முன்பு ஏறினேன். முதலில் 15-ந்தேதி மலையின் உச்சிக்கு செல்ல இருந்தேன். ஆனால், காலநிலையை முன்னிட்டு, 14-ந்தேதி மலை உச்சிக்கு சென்றேன்.

இந்திய கொடியை பிடித்தபடி புகைப்படம் ஒன்றையும் எடுத்து கொண்டேன். இந்த சாதனையை ஏற்படுத்த என்னுடைய பெற்றோரே ஊக்கம் அளித்தனர் என கூறியுள்ளார்.

1 More update

Next Story