காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை


காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
x

சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் அடையாளம் காணும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஸ்ரீநகர்,

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகளை ஒழிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனால் எல்லைப்பகுதியில் ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் வடக்கு காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தின் கும்காடி பகுதியில் சர்வதேச எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே தீவிரவாதிகள் சிலர் சந்தேகத்திற்கிடமாக நடமாடுவதாக தகவல் கிடைத்தது.

இதையடுத்து பாதுகாப்புப் படை வீரர்கள் அப்பகுதியை சுற்றிவளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். பதிலுக்கு பாதுகாப்புப் படை வீரர்களும் திருப்பி சுட்டனர். இந்த சண்டையில் 2 தீவிரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.

இதனால் அவர்கள் எல்லையில் ஊடுருவும் முயற்சி தடுக்கப்பட்டதுடன், அவர்களின் சதித் திட்டமும் முறியடிக்கப்பட்டது. தீவிரவாதிகள் குறித்த விவரங்களை பாதுகாப்புப் படையினர் சேகரித்து வருகின்றனர். தொடர்ந்து அப்பகுதியில் தீவிரவாதிகளை தேடி கண்டுபிடிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பாதுகாப்புப் பணியும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story