இந்தியாவில் நடப்பாண்டில் ஜூன் மாதம் வரை 2,500 விமானங்கள் ரத்து

ஜனவரி தொடங்கி ஜூன் வரை 6 மாதங்களில் 2 ஆயிரத்து 458 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
இந்த ஆண்டு (2025) தொடங்கி கடந்த ஜூன் மாதம்வரை நாட்டில் எவ்வளவு விமானங்கள் ரத்து செய்யப்பட்டது என நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கேள்வி எழுப்பப்பட்டது. இதுகுறித்து சிவில் விமான போக்குவரத்துத்துறை மாநில மந்திரி முரளிதர் மோகல் எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார். அதில் இந்தாண்டு ஜனவரி தொடங்கி ஜூன் வரை 6 மாதங்களில் 2 ஆயிரத்து 458 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
அதிகப்பட்சமாக இண்டிகோ நிறுவனத்தின் 1,017 விமானங்களும், ஏர் இந்தியாவின் 662 விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இது உள்நாடு மற்றும் வெளிநாடு என பொருந்தும் என தெரிவித்துள்ளார். மேலும் கடந்த ஆண்டை காட்டிலும் நாட்டில் உள்நாட்டு விமான போக்குவரத்து பயன்பாடு 7.34 சதவீதம் உயர்ந்துள்ளதாக தெரிவித்தார்.
Related Tags :
Next Story






