650 அடி பள்ளத்தாக்கில் கார் கவிழ்ந்து 3 பேர் பலி


650 அடி பள்ளத்தாக்கில் கார் கவிழ்ந்து 3 பேர் பலி
x

திருமண விழாவில் கலந்துகொண்டு வீடு திரும்பியபோது கார் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது.

சிம்லா,

இமாசலபிரதேச மாநிலம் சம்பா மாவட்டம் பஹாலா கிராமத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் திருமண விழாவில் கலந்து கொண்டு விட்டு காரில் திரும்பி கொண்டிருந்தனர். அவர்கள் கார் தேவிகோட்டி- டெபா மலைப்பாதையில் வந்த போது கார் நிலைதடுமாறி சுமார் 650 அடி ஆழமான பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது.

இதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 3 பேர் காயம் அடைந்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் உள்ளூர்வாசிகள் உதவியுடன் மீட்பு பணிகளில் ஈடுபட்டு காயம் அடைந்தவர்களை மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். உயிரிழந்தவர்கள் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

1 More update

Next Story