அமித்ஷா தலைமையில் இன்று 32-வது வடக்கு மண்டல கவுன்சில் கூட்டம்

ஊட்டச்சத்து, கல்வி, சுகாதாரம், மின்சாரம், நகர்ப்புற திட்டம் மற்றும் கூட்டுறவு அமைப்பு போன்ற பல்வேறு மண்டல அளவிலான பொதுநலன் சார்ந்த விவகாரங்கள் பற்றியும் விரிவாக ஆலோசனை மேற்கொள்ளப்படும்.
அமித்ஷா தலைமையில் இன்று 32-வது வடக்கு மண்டல கவுன்சில் கூட்டம்
Published on

புதுடெல்லி,

அரியானாவின் பரீதாபாத் நகரில் வடக்கு மண்டல கவுன்சிலின் 32-வது கூட்டம் இன்று நடக்கிறது. வடக்கு மண்டல கவுன்சில் ஆனது அரியானா, இமாசல பிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான், டெல்லி, ஜம்மு-காஷ்மீர், லடாக் மற்றும் சண்டிகர் ஆகிய மாநிலங்கள் அல்லது யூனியன் பிரதேசங்களை உள்ளடக்கியது.

இந்த நிலையில், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தலைமையில் 32-வது வடக்கு மண்டல கவுன்சில் கூட்டம் இன்று நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் மத்திய அரசு, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் மூத்த அதிகாரிகள் பங்கேற்பார்கள்.

இந்த கூட்டம் ஆனது அரியானா அரசு, மத்திய அரசு, உள்விவகார அமைச்சகம் மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான கவுன்சிலுக்கான செயலகம் ஆகியவற்றால் இணைந்து நடத்தப்படுகிறது. இந்த வடக்கு மண்டல கவுன்சிலின் தலைவராக அமித்ஷா இருப்பார். துணை தலைவராக ஓராண்டுக்கு அரியானா முதல்-மந்திரி இருப்பார்.

இந்த கூட்டத்தில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பான வழக்குகளை விரைந்து விசாரிப்பது, அவற்றுக்கான விரைவு சிறப்பு நீதிமன்றங்களை அமைப்பது, ஒவ்வொரு கிராமத்திலும் வங்கி வசதி ஏற்படுத்துவது உள்ளிட்ட தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்கள் ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது.

இதேபோன்று, ஊட்டச்சத்து, கல்வி, சுகாதாரம், மின்சாரம், நகர்ப்புற திட்டம் மற்றும் கூட்டுறவு அமைப்பு போன்ற பல்வேறு மண்டல அளவிலான பொதுநலன் சார்ந்த விவகாரங்கள் பற்றியும் விரிவாக ஆலோசனை மேற்கொள்ளப்படும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com