கணவரை பிரிந்த 38 வயது பெண்...ஆசைவார்த்தை கூறி அழைத்து சென்று கல்லூரி மாணவருடன் உல்லாசம்

கல்லூரி மாணவன் தனது பெற்றோரிடம் படிப்பு சம்பந்தமாக பெங்களூரு செல்வதாக கூறிவிட்டு பெண் ஊழியருடன் சென்றுவிட்டார்.
திருப்பதி,
ஆந்திர மாநிலம் சித்தூரை சேர்ந்த 19 வயது மாணவர் தனியார் கல்லூரியில் பி.டெக் முதலாமாண்டு படித்து வருகிறார். அதே கல்லூரியில் 38 வயது பெண் லேப் டெக்னீஷியனாக பணிபுரிந்து வருகிறார். அவர் தனது கணவரை பிரிந்து தனியாக வசித்து வருகிறார். கணவர் இல்லாமல் தனிமையில் இருந்து வந்துள்ளதால் இவரை தனிமை வாட்டியது. அப்போது கல்லூரியில் மாணவருடன் பெண்ணிற்கு பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் காதலாக மாறியது.
கடந்த மே மாதம் அந்த மாணவன் தனது பெற்றோரிடம் படிப்பு சம்பந்தமாக பெங்களூரு செல்வதாக கூறிவிட்டு பெண் ஊழியருடன் சென்றுவிட்டார். அவர் திரும்பி வராததால் பெற்றோர் சந்தேகமடைந்து விசாரித்தனர். அப்போது பெண் ஊழியர் மாணவனை ஆசைவார்த்தை கூறி அழைத்து சென்றது தெரியவந்தது. இதனை அறிந்த மாணவரின் பெற்றோர்கள் கடந்த 15-ம் தேதி போலீசில் புகார் அளித்தனர் சித்தூர் 2-வது டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
பெங்களூருவில் உள்ள ஒரு லாட்ஜில் கடந்த 2 மாதங்களாக மாணவருடன் பெண் ஊழியர் உல்லாசமாக இருந்து வந்துள்ளது தெரியவந்தது. இதனையடுத்து அவர்களை மீட்ட போலீசார் சில அறிவுரைகளை இருவருக்கும் வழங்கினர். இருவரையும் தனித்தனியாக அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.






