பைக் மீது கார் மோதி கோர விபத்து - ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி

தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜெய்ப்பூர்,
ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் மாவட்டம் டவா கிராமத்தை சேர்ந்தவர் நட்வர். இவருக்கு திருமணமாகி மனைவி, 2 பிள்ளைகள் இருந்தனர்.
இந்நிலையில், நட்வர் இன்று தனது பைக்கில் மனைவி, பிள்ளைகளை அழைத்துக்கொண்டு மாமியார் வீட்டிற்கு சென்றுள்ளார். நட்பாய் - ஜனுதூர் நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது சாலையில் எதிரே வேகமாக வந்த கார், பைக் மீது மோதியது. இந்த கோர விபத்தில் பைக் உடனடியாக தீப்பற்றி எரிந்தது.
இந்த விபத்தில் பைக்கில் பயணித்த நட்வர் அவரது மனைவி, பிள்ளைகள் என 4 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து அறிந்த அப்பகுதியை சேர்ந்த கிராமத்தினர் விரைந்து சென்று காரில் வேகமாக வந்து விபத்தை ஏற்படுத்தியவர்களை சரமாரியாக தாக்கினர். மேலும், காருக்கும் தீவைத்து கொளுத்தினர். தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






