இமாசல பிரதேசத்தில் மழைக்கு 43 பேர் பலி; 10 மாநிலங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட்


இமாசல பிரதேசத்தில் மழைக்கு 43 பேர் பலி; 10 மாநிலங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட்
x

இமாசல பிரதேசத்தில் கடந்த 14 நாட்களில் மழை தொடர்பான சம்பவங்களில் சிக்கி 43 பேர் உயிரிழந்து உள்ளனர்.

புதுடெல்லி,

தென்மேற்கு பருவமழை கடந்த 16 ஆண்டுகளில் இல்லாத வகையில் கேரளாவில் கடந்த மே மாதம் 24-ந்தேதி தொடங்கியது. இதனை தொடர்ந்து, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. வடமாநிலங்களிலும் கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில், இந்திய வானிலை மையம் வெளியிட்ட எச்சரிக்கை அறிவிப்பில், இமாசல பிரதேசம், உத்தரகாண்ட், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், குஜராத், மராட்டியம், சத்தீஷ்கார், கோவா, மேற்கு வங்காளம் மற்றும் கர்நாடகாவின் கடலோர பகுதிகளுக்கு ஆரஞ்சு அலெர்ட் விடப்படுகிறது என தெரிவித்து உள்ளது.

இமாசல பிரதேசத்தில் கடந்த 14 நாட்களில் மழை தொடர்பான சம்பவங்களில் சிக்கி 43 பேர் உயிரிழந்து உள்ளனர். 37 பேரை காணவில்லை. மேக வெடிப்புகள், வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன.

இமாசல பிரதேசத்தின் ஒரு சில பகுதிகளில், நாளையும் 21 செ.மீ.க்கும் கூடுதலாக, மிக கனமழை பெய்ய கூடும் என எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. இதேபோன்று, மராட்டியத்தின் மத்திய பகுதிகளில் மலைத்தொடர் பகுதிகளில் 6 மற்றும் 7 ஆகிய நாட்களில் 21 செ.மீ.க்கும் கூடுதலாக, மிக கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

1 More update

Next Story