கியாஸ் சிலிண்டர் வெடித்து விபத்து - 5 பேர் பலி
கியாஸ் சிலிண்டர் வெடித்த விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.
லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் புலந்தசாஹர் மாவட்டம் சிகந்தராபாத் பகுதியில் உள்ள குடியிருப்பில் 19 பேர் வசித்து வருகின்றனர். அந்த குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் சமையல் அறையில் இருந்த கியாஸ் சிலிண்டர் நேற்று இரவு 9 மணியளவில் வெடித்து சிதறியது. இந்த சம்பவத்தில் குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்தது.
தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், தீயணைப்பு படையினர் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கிய மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதேவேளை, இந்த சம்பவத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், இந்த சிலிண்டர் வெடி விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story