மணிப்பூரில் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த 5 பேர் கைது

மணிப்பூரில் இதுவரை 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இம்பால்,
மணிப்பூரில் கடந்த 2023-ல் இரு குழுக்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டு வன்முறையாக மாறியது. இதனால் அங்கு ஜனாதிபதி ஆட்சி அமலில் உள்ளது. அங்கு பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு பயங்கரவாத செயல்களில் ஈடுபடுகிறவர்களை கைது செய்து வருகின்றனர்.
இந்தநிலையில் தவுபால் மாவட்டத்தில் உள்ள குனோ பகுதியைச் சேர்ந்த பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வந்த 5 பேரை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். அவர்களில் 3 பேர் பெண்கள், அவர்களிடம் இருந்து துப்பாக்கிகள், தோட்டாக்கள் போன்ற பயங்கர ஆயுதங்களையும் பறிமுதல் செய்தனர். இதுவரை 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story






