சத்தீஷ்காரில் 9 பெண் உள்பட 51 நக்சலைட்டுகள் சரண்


சத்தீஷ்காரில் 9 பெண் உள்பட 51 நக்சலைட்டுகள் சரண்
x

சத்தீஷ்காரின் பிஜாப்பூரில் நடப்பு ஆண்டின் ஜனவரியில் இருந்து, இதுவரையில் மொத்தம் 986 நக்சலைட்டுகள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

பிஜாப்பூர்,

சத்தீஷ்காரின் பிஜாப்பூர் மாவட்டத்தில் 9 பெண் நக்சலைட்டுகள் உள்பட 51 நக்சலைட்டுகள் ஆயுதங்களை விடுத்து, போலீசார் முன்னிலையில் இன்று சரண் அடைந்தனர். அவர்களில் 20 பேருக்கு எதிராக மொத்தம் ரூ.66 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டு இருந்தது.

அவர்கள், அரசின் மறுவாழ்வு கொள்கை மற்றும் வளர்ச்சி திட்டங்களால் ஈர்க்கப்பட்டு பொதுவாழ்வுக்கு திரும்பியுள்ளனர் என பி போலீஸ் சூப்பிரெண்டு ஜிதேந்திர குமார் யாதவ் கூறியுள்ளார்.

பிஜாப்பூரில் நடப்பு ஆண்டின் ஜனவரியில் இருந்து, இதுவரையில் மொத்தம் 650 நக்சலைட்டுகள் பொதுவாழ்வுக்கு திரும்பியுள்ளனர். 196 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டு உள்ளனர். 986 நக்சலைட்டுகள் கைது செய்யப்பட்டு உள்ளனர் என பிஜாப்பூர் போலீஸ் சூப்பிரெண்டு ஜிதேந்திரா குமார் யாதவ் கூறினார்.

1 More update

Next Story