போரால் பாதிக்கப்பட்ட பாலஸ்தீன மக்களுக்கு நிதி திரட்டுவதாக ரூ.4 கோடி மோசடி - 2 பேர் கைது


போரால் பாதிக்கப்பட்ட பாலஸ்தீன மக்களுக்கு நிதி திரட்டுவதாக ரூ.4 கோடி மோசடி - 2 பேர் கைது
x

போரால் பாதிக்கப்பட்ட பாலஸ்தீன மக்களுக்கு நிதி திரட்டுவதாக ரூ.4 கோடி மோசடி நடந்துள்ளது.

மும்பை,

இஸ்ரேல் மற்றும் காசாவின் ஹமாஸ் அமைப்பினருக்கு இடையே கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபரில் போர் தொடங்கியது. கடந்த ஆண்டு அக்டோபரில் போர் நிறுத்த உடன்படிக்கை எட்டப்பட்டாலும் மோதல்கள் தொடரத்தான் செய்கின்றன. இந்த போரில் பாலஸ்தீனிய மக்கள் இதுவரை 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு உள்ளனர். மேலும் லட்சக்கணக்கான மக்கள் காயம் அடைந்துள்ளனர்.

இந்தநிலையில் போரால் பாதிக்கப்பட்ட பாலஸ்தீனிய மக்களுக்கு உதவுவதாக கூறி பீட் மாவட்டம் மஜால்காவ் பகுதியில் ஒரு கும்பல் சட்டவிரோதமாக நிதி திரட்டுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் உள்ளூர் போலீசார் மற்றும் பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் மஜால்காவ் அருகே உள்ள பட்ரூட் கிராமத்தில் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது அங்கு பதிவு செய்யப்படாத அறக்கட்டளை தொடங்கி, அதன் மூலம் பொதுமக்களிடம் ரூ.4 கோடிக்கு மேல் நிதி திரட்டியது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்களில் 2 பேரை கைது செய்தனர். பாலஸ்தீன மக்கள் போர்வையில் பயங்கரவாத செயல்களுக்கு நிதி திரட்டப்பட்டதா?, மேலும் இந்த கும்பலுக்கு தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story