கர்நாடகத்தில் ஹீலியம் பலூன் சிலிண்டர் வெடித்து விபத்து - வியாபாரி உயிரிழப்பு

பலூன்களை நிரப்புவதற்காக பயன்படுத்தப்படும் ஹீலியம் சிலிண்டர் திடீரென வெடித்து சிதறியது.
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் மைசூருவில் உள்ள மைசூரு அரண்மனையின் ஜெயமார்த்தாண்டா வாசல் அருகே ஹீலியம் பலூன்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தன. உத்தர பிரதேச மாநிலம் கன்னோஜ் மாவட்டத்தை சேர்ந்த சலீம்(வயது 40) என்பவர் ஹீலியம் பலூன்களை விற்பனை செய்து வந்தார்.
இந்நிலையில், நேற்று இரவு 8.30 மணியளவில், பலூன்களை நிரப்புவதற்காக பயன்படுத்தப்படும் ஹீலியம் சிலிண்டர் திடீரென வெடித்து சிதறியது. இந்த விபத்தில் பலூன் வியாபாரி சலீம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் அருகில் இருந்த 5 நபர்களுக்கு காயங்கள் ஏற்பட்ட நிலையில், அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story






