வறுமையால் 8 குழந்கைகளை பெற்ற கூலித் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் குடும்பத்தில் செலவு கூடுதலாகி கொண்டே வந்ததால், மனைவியிடம் அடிக்கடி புலம்பி வந்தார்.
ஐதராபாத்,
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ளது மயிலார்தேவ் பள்ளி. இங்கு பீகாரை சேர்ந்த நவ்ஷாத் (வயது 45), காத்தூன்(38) தம்பதி வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு ஐந்து மகன்கள் மற்றும் மூன்று மகள்கள் உள்ளனர்.
கணவன், மனைவி இருவரும் கூலி வேலைக்கு சென்று உழைத்து குழந்தைகளை காப்பாற்றி வந்தனர். ஆனால் குடும்பத்தில் செலவு கூடுதலாகி கொண்டே வந்ததால், நவ்ஷாத் மனைவியிடம் அடிக்கடி புலம்பி வந்தார்.
இந்த நிலையில் நவ்ஷாத் சம்பவத்தன்று நன்றாக குடித்துவிட்டு வந்து வீட்டின் கதவை உட்புறமாக பூட்டிக் கொண்டார். பின்னர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதைப் பார்த்து அவரது மனைவியும், குழந்தைகளும் கதறி அழுதனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடம் விரைந்து நவ்ஷாத் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
Related Tags :
Next Story






