சூரிய புயல்களின் மர்மங்களை கண்டுபிடித்த ஆதித்யா எல்-1

சூரிய புயல்கள் மற்றும் விண்ணில் உள்ள கரோனல் மாஸ் எஜெஷன்ஸ் போன்றவற்றை விண்கலம் ஆராய்ந்து வருகிறது.
சூரிய புயல்களின் மர்மங்களை கண்டுபிடித்த ஆதித்யா எல்-1
Published on

சென்னை,

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சூரியனின் வெளிப்புற வளிமண்டலத்தை ஆய்வு செய்வதற்காக, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா, சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து கடந்த 2023-ம் ஆண்டு செப்டம்பர் 2-ந்தேதி பி.எஸ்.எல்.வி. சி-57 ராக்கெட் மூலம் ஆதித்யா எல்-1 என்ற விண்கலத்தை முதன் முதலில் விண்ணில் ஏவியது. விண்ணில் ஏவப்பட்டு 127 நாட்களுக்குப் பிறகு, அதாவது 2024-ம் ஆண்டு ஜனவரி 6-ந்தேதி அன்று, விண்கலம் வெற்றிகரமாக அதன் இலக்கான எல்-1 புள்ளியைச் சுற்றியுள்ள ஹாலோ சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. இது சூரியனின் வெளிப்புற வளிமண்டலத்தை ஆய்வு செய்து, சூரிய புயல்கள் மற்றும் விண்ணில் உள்ள கரோனல் மாஸ் எஜெஷன்ஸ் போன்றவற்றை ஆராய்ந்து வருகிறது.

சூரியனின் உச்ச செயல்பாட்டுக் காலத்தை 2026-ம் ஆண்டு ஆராய தயாராகி வருகிறது. இதற்கு முன்பாக தற்போது சக்தி வாய்ந்த சூரிய புயலின் மர்மங்களை கண்டுப்பிடித்து தரவுகளை அனுப்பி உள்ளது. அத்துடன் சூரிய புயல் ஏன் வழக்கத்திற்கு மாறாக நடந்து கொண்டது என்பதை வெளிப்படுத்துகிறது. ஆதித்யா-எல்-1 தற்போது கண்டுபிடித்து அனுப்பிய மிகவும் துல்லியமான காந்தப்புலத் தரவு மூலம், கடந்த 2024-ம் ஆண்டு மே மாதம் ஏற்பட்ட மிகவும் சக்தி வாய்ந்த சூரியப் புயலான கேனன் புயல்' எதிர்பார்த்ததைவிட பல மடங்கு சக்தி வாய்ந்தது என்பதற்கான ரகசியத்தை விஞ்ஞானிகள் புரிந்து கொள்ள உதவியுள்ளது. முழு உலகிற்கும் இந்த கண்டுபிடிப்பு முக்கியமானது. இந்த கண்டுபிடிப்பு எதிர்கால விண்வெளி வானிலை முன்னறிவிப்புக்கு ஒரு பெரிய முன்னேற்றமாகும் என விஞ்ஞானிகள் தெரிவித்தனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com