டெல்லி, மும்பை உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
டெல்லி போலீசார் மோப்ப நாய்கள் உதவியுடன் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
புதுடெல்லி,
டெல்லி உயர்நீதிமன்றத்திற்கு இன்று காலை 11.40 மணி அளவில் மெயில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. வெடிகுண்டு மிரட்டலால் வழக்குகள் விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. இதனையடுத்து மோப்ப நாய் உதவியுடன் போலீசார் வெடிகுண்டு நிபுணர்கள் நீதிமன்றத்தில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
பாதுகாப்பு கருதி நீதிமன்றத்தில் உள்ள நீதிபதிகள், வழக்கறிஞர்கள், ஊழியர்கள் என அனைவரும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். சோதனையில் நீதிமன்றத்தில் வெடிகுண்டு எதுவும் கண்டுபிடிக்கபடவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
டெல்லி ஐகோர்ட்டை தொடர்ந்து மும்பை ஐகோர்ட்டிற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அங்கும் மோப்ப நாய்கள் உதவியுடன் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். சமீப காலமாக இந்தியா முழுவதுமே வெடிகுண்டு மிரட்டல் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.








