ஆமதாபாத் விமான விபத்து: 190 பேரின் டி.என்.ஏ. பொருத்தம்

விமான விபத்தில் உயிரிழந்த 241 பேரில் 190 பேரின் டி.என்.ஏ. மாதிரிகள் அவர்களது உறவினர்களுடன் பொருந்தியுள்ளன.
ஆமதாபாத்,
கடந்த வாரம் ஆமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்த 241 பேரில் 190 பேரின் டி.என்.ஏ. மாதிரிகள் அவர்களது உறவினர்களுடன் பொருந்தியுள்ளன. அதில் 159 பயணிகளின் உடல்கள் அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன
கடந்த 12-ம் தேதி 242 பயணிகள் மற்றும் பணியாளர்களுடன் குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் இருந்து லண்டனுக்குச் சென்ற ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த ஒருவரைத் தவிர மற்ற அனைவரும் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் பலரது உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு உருக்குலைந்ததால், டி.என்.ஏ. சோதனை மூலம் அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது.
இதுவரை 190 பேரின் டி.என்.ஏ. மாதிரிகள் அவர்களது உறவினர்களுடன் பொருந்தியுள்ளன. அவற்றில் 159 பயணிகளின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மற்ற உடல்களின் டி.என்.ஏ மாதிரிகளை பரிசோதிக்கும் செயல்முறை இன்னும் நடந்து வருகிறது.






