நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது

விமானம் மதியம் 1 மணியளவில் டெல்லி விமான நிலையத்தில் தரையிறங்கியது.
புதுடெல்லி,
தலைநகர் டெல்லியில் இருந்து ஏர் இந்தியா நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று இன்று காலை சிங்கப்பூர் நோக்கி புறப்பட்டது. அந்த விமானத்தில் பயணிகள், விமான ஊழியர்கள் உள்பட மொத்தம் 190 பேர் இருந்தனர்.
இந்நிலையில், புறப்பட்டு சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு நடுவானில் சென்றுகொண்டிருந்தபோது விமானத்தில் திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானம் மீண்டும் டெல்லி நோக்கி திருப்பி விடப்பட்டது.
இதையடுத்து அந்த விமானம் மதியம் 1 மணியளவில் டெல்லி விமான நிலையத்தில் தரையிறங்கியது. விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். பின்னர் அவர்கள் வேறு விமானம் மூலம் சிங்கப்பூர் அனுப்பி வைக்கப்பட்டனர். விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Related Tags :
Next Story






