

புதுடெல்லி,
முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் இறுதியாக விழித்துக்கொண்டு, விமானங்களில் எகனாமி வகுப்பு கட்டணத்துக்கு உச்சவரம்பு நிர்ணயித்துள்ளது. விமானங்கள் துறையில் இரட்டை மேலாதிக்கம் நீடிக்கும் வரை, கட்டண உச்சவரம்பும் நீடிக்க வேண்டும். வலுவான போட்டி இல்லாதநிலையில், பொது நலனை பாதுகாக்க கட்டண கட்டுப்பாடுதான் ஒரே வழி. பெரும்பாலான பயணிகளின் நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.