3 நாள் பயணமாக அசாம் செல்கிறார் அமித்ஷா


3 நாள் பயணமாக அசாம் செல்கிறார் அமித்ஷா
x

அசாமில் ஏபிஎஸ்யு-வின் 57வது மாநாட்டில் அமித்ஷா உரையாற்ற உள்ளார்.

புதுடெல்லி,

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா மார்ச் 14ல் மூன்று நாள் பயணமாக அசாம் செல்கிறார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார். கோக்ரஜாரில் உள்ள அனைத்து போடோ மாணவர் சங்கத்தின் வருடாந்திர மாநாட்டில் அவர் உரையாற்றுகிறார்.

மார்ச் 15ல் டெர்கானில் உள்ள லச்சித் போர்புகன் போலீஸ் பயிற்சி நிறுவனத்தைத் திறந்துவைக்க உள்ளார். அதன்பின்னர் மிசோரத்துக்குப் புறப்பட்டு, இரவு தங்குவதற்காக குவஹாத்திக்குத் திரும்புவார். மறுநாள் டெல்லிக்கு திரும்புவதற்கு முன்பு ஏபிஎஸ்யு-வின் 57வது மாநாட்டில் உரையாற்றுவார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

1 More update

Next Story