ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் மதுரைக்கு வரவிருந்த விமானத்தில் கோளாறு


ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் மதுரைக்கு வரவிருந்த விமானத்தில் கோளாறு
x

மதுரைக்கு பவன் கல்யாண் தாமதமாக வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐதராபாத்,

மதுரையில் இன்று மாலை நடைபெற உள்ள முருகன் மாநாட்டுக்கு ஆந்திர மாநில துணை முதல் மந்திரி பவன் கல்யாண் வருகை தர உள்ளார். இதற்காக அவர் ஐதராபாத்தில் இருந்து தனி விமானம் மூலம் மதுரைக்கு வர இருந்தார். இந்த நிலையில், பவன் கல்யாண் புறப்பட இருந்த தனி விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது தெரியவந்தது. இதனால் விமானம் புறப்படும் நேரம் மாற்றப்பட்டுள்ளது.

இதனால் அவர் மதுரைக்கு தாமதமாக வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மதுரை வரும் பவன் கல்யாண், மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு, மாநாட்டில் கலந்துகொள்ள இருந்தார். தற்போது விமானம் தாமதமாகியுள்ளதால், அவர் சாமி தரிசனம் செய்யும் நேரம் மாற்றப்பட்டுள்ளது.

1 More update

Next Story