தாஜ்மஹாலில் டிரோன் எதிர்ப்பு பாதுகாப்பு கவசம் அமைப்பு


தாஜ்மஹாலில் டிரோன் எதிர்ப்பு பாதுகாப்பு கவசம் அமைப்பு
x
தினத்தந்தி 31 May 2025 10:26 AM IST (Updated: 31 May 2025 11:22 AM IST)
t-max-icont-min-icon

உலக அதிசங்களில் ஒன்றாக தாஜ்மஹால் விளங்குகிறது.

லக்னோ,

இந்தியா - பாகிஸ்தான் மோதலின்போது டிரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. சீக்கியர்களின் புனிதத்தலமான குருத்வாரா உள்ளிட்ட முக்கிய இடங்களை குறிவைத்து பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியது. இதை இந்திய வான் பாதுகாப்பு அமைப்பு முறியடித்தது.

இதனிடையே, உலக அதிசயங்களில் ஒன்றாக உத்தரபிரதேசத்தின் ஆக்ராவில் உள்ள தாஜ்மஹால் விளங்குகிறது. இதைக்காண தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் ஆக்ராவிற்கு வருகின்றனர். தாஜ்மஹாலுக்கு மத்திய தொழிற்பாதுகாப்பு படையினர், உ.பி. போலீசார் பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.

இந்நிலையில், தாஜ்மஹாலுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதால் டிரோன் எதிர்ப்பு பாதுகாப்பு கவசம் அமைக்கப்பட்டுள்ளது. 7 முதல் 8 கிலோ மீட்டர் தூரத்தில் வரும் டிரோன்களை துல்லியமாக தாக்கி அளிக்கும் திறன் கொண்ட டிரோன் எதிர்ப்பு கவசம் தாஜ்மஹாலில் அமைக்கப்பட்டுள்ளது. தாஜ்மஹாலின் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த டிரோன் எதிர்ப்பு பாதுகாப்பு கவசம் தற்போது 500 மீட்டர் தொலைவிற்கு கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story