நான் விடுதலையாகி விட்டேன்... 40 லிட்டர் பாலில் குளித்து விவாகரத்தை கொண்டாடிய நபர்


நான் விடுதலையாகி விட்டேன்... 40 லிட்டர் பாலில் குளித்து விவாகரத்தை கொண்டாடிய நபர்
x
தினத்தந்தி 14 July 2025 11:19 PM IST (Updated: 14 July 2025 11:20 PM IST)
t-max-icont-min-icon

மனைவியுடனான விவாகரத்தை 40 லிட்டர் பாலில் குளித்து கொண்டாடிய நபரின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

நல்பாரி,

அசாமின் நல்பாரி மாவட்டம் போரோலியாபாராவில் வசித்து வருபவர் மாணிக் அலி (32 வயது). இவரது மனைவி திருமணத்துக்கு புறம்பான உறவில் இருந்துள்ளார். இதன் காரணமாக 2 முறை வீட்டை விட்டு ஓடியுள்ளார். இருப்பினும், மாணிக் அலி தனது மகளுக்காக இருமுறையும் மன்னித்து மனைவி திரும்பி வந்தபோது அவருடன் குடும்பம் நடத்தினார்.

ஆனால் அவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதால் தம்பதியினர் விவாகரத்துக்கான சட்டப்பூர்வ உதவியை நாடினர். சில நாட்களுக்கு முன்பு அவர்களுக்கு விவாகரத்து சட்டபூர்வமாக வழங்கப்பட்டது.

இந்த நிலையில் மாணிக் அலி 4 வாளிகளில் 40 லிட்டர் பாலை நிரப்பி அதில் குளித்து, ''இன்றுமுதல் நான் விடுதலையாகி விட்டேன்'' என்று அறிவித்து தனது விவாகரத்தை கொண்டாடியுள்ளார். இது குறித்த வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

1 More update

Next Story