4 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த ஆட்டோ டிரைவர் - அதிர்ச்சி சம்பவம்

ராஜ்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
போபால்,
மத்தியபிரதேச மாநிலம் சட்னா மாவட்டம் சிவில் லைன் பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ராஜ்குமார் (வயது 21) நேற்று முன் தினம் பள்ளி சிறுமிகளை மாலை வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். ஒவ்வொரு சிறுமிகளையும் அவரவர் வீட்டில் இறக்கிவிட்டப்பின் கடைசியாக 4 வயது சிறுமியை வீட்டில் இறக்கிவிடாமல் ஆள்நடமாட்டமற்ற பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார்.
அங்கு வைத்து சிறுமியை ராஜ்குமார் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்னர், சிறுமியை வீட்டின் வாசலில் இறக்கிவிட்டு சென்றுள்ளார்.
வீட்டிற்கு சென்ற சிறுமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சிறுமியிடம் பெற்றோர் கேட்டுள்ளனர். அப்போது, ஆட்டோ டிரைவர் தன்னிடம் தவறாக நடந்தது குறித்து சிறுமி கூறியுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், உடனடியாக போலீசில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த ஆட்டோ டிரைவர் ராஜ்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.






