பெங்களூரு கோர சம்பவம்: முதல்-மந்திரி விளக்கம்

கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியாகினர்
பெங்களூரு,
18-வது ஐ.பி.எல். தொடரில் அகமதாபாத் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி இறுதிப் போட்டியை வென்று முதல் முறையாக கோப்பையை கைப்பற்றியது. இந்த வெற்றியின் மூலம் அந்த அணியின் நீண்ட கால ஏக்கம் தீர்ந்துள்ளது.இதனை கொண்டாட பெங்களூருவில் ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி பெங்களூரு அணி வீரர்களுக்கு , கர்நாடக முதல்-மந்திரி, துணை முதல்-மந்திரி, ஆகியோர் தலைமையில் பாராட்டு நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சின்னசாமி மைதானத்தில் அவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற இருந்த நிலையில் , பெங்களூரு அணியை வரவேற்க ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டனர். இந்நிலையில் வீரர்கள் வரும்வரை பொறுமையாக இருக்காமல் ஸ்டேடியத்தின் சுவர்கள் மற்றும் வேலிகளில் ரசிகர்கள் ஏறிச் செல்ல தொடங்கினர்.இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியாகினர். 50 மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக விளக்கமளித்துள்ள கர்நாடகா முதல் மந்திரி சித்தராமையா கூறியதாவது ,
இந்த துயர சம்பவம் நடந்திருக்கக்கூடாது. இந்த சம்பவம் குறித்து அரசாங்கம் ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறது. சின்னசாமி மைதானத்திற்கு அருகில் சம்பவம் நடந்தது. உயிரிழந்தவர்களின் தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் . . காயமடைந்தவர்களுக்கு அரசாங்கம் இலவச சிகிச்சை அளிக்கும்.
இந்த சம்பவத்தை நியாயப்படுத்த விரும்பவில்லை. எங்கள் அரசாங்கம் இதில் அரசியல் செய்யாது. நாஇவ்வளவு பெரிய கூட்டத்தை யாரும் எதிர்பார்க்கவில்லை. மைதானத்தில் 35,000 பேர் மட்டுமே கலந்து கொள்ள முடியும், ஆனால் 2-3 லட்சம் பேர் வந்தனர் என தெரிவித்தார் .






