இன்ஸ்டாகிராமில் பழக்கம்.. அடிக்கடி தனிமையில் உல்லாசம்.. 2-வது கணவரை உதறிவிட்டு போலீஸ்காரருடன் ஓடிய பெண்


இன்ஸ்டாகிராமில் பழக்கம்.. அடிக்கடி தனிமையில் உல்லாசம்.. 2-வது கணவரை உதறிவிட்டு போலீஸ்காரருடன் ஓடிய பெண்
x

AI Image

தனது 2-வது கணவர் மற்றும் 2 மகன்களை உதறிவிட்டு போலீஸ்காரருடன் பெண் ஒருவர் ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சந்திரா லே-அவுட்,

கர்நாடக மாநிலம் பெங்களூரு சந்திரா லே-அவுட் பகுதியில் வசித்து வந்தவர் மோனிகா(வயது 35). இவருக்கு திருமணமாகி கணவரும், 2 மகன்களும் உள்ளனர். இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக மோனிகா தனது முதல் கணவரை பிரிந்தார். பின்னர் அவர் 2-வதாக இன்னொருவரை திருமணம் செய்து கொண்டார். 2-வது கணவர் மற்றும் தனது 2 மகன்களுடன் மோனிகா வசித்து வந்தார்.

இந்த நிலையில் மோனிகா ‘ரீல்ஸ்’ வீடியோக்கள் எடுத்து அதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வந்தார். அதைப்பார்த்த பெங்களூரு எச்.எஸ்.ஆர். லே-அவுட் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வரும் ராகவேந்திரா என்பவர் விருப்பம் தெரிவித்து வந்தார்.

ஒரு கட்டத்தில் மோனிகாவுக்கு அவர் இன்ஸ்டாகிராம் மூலம் ‘பாலோ ரிக்வஸ்ட்’ கொடுத்தார். தான் 2 குழந்தைகளின் தாய் மற்றும் 2-வது கணவருடன் வாழ்ந்து வருவதை மறந்த மோனிகா, போலீஸ்காரர் ராகவேந்திராவின் பாலோ ரிக்வஸ்டை ஏற்றது மட்டுமல்லாமல், அவருக்கு தனது செல்போன் எண்ணையும் பகிர்ந்தார். அதையடுத்து இருவரும் அடிக்கடி செல்போனில் பேசி பழகி வந்தனர்.

ஒரு கட்டத்தில் இவர்களது பழக்கம் கள்ளக்காதலாக மாறியது. இதையடுத்து இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தனர். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மோனிகா தனது வீட்டிற்கே தன்னுடைய கள்ளக்காதலனை வரவழைத்து உல்லாசம் அனுபவித்து வந்தார்.

இந்த நிலையில் இருவரும் ஜோடியாக பல்வேறு வகைகளில் ரீல்ஸ் வீடியோக்களை எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வந்தனர். போலீஸ்காரர் ராகவேந்திராவுக்கும் திருமணமாகி மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். இந்த நிலையில் கள்ளக்காதல் ஜோடி வீட்டைவிட்டு வெளியேற முடிவு செய்தனர்.

அதன்படி கடந்த 2 நாட்களுக்கு முன்பு மோனிகா தனது வீட்டில் இருந்த 160 கிராம் நகைகள், ரூ.2 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு போலீஸ்காரர் ராகவேந்திராவுடன் ஓடிவிட்டார். அவர்கள் தற்போது எங்கு இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. இதுபற்றி அறிந்த மோனிகாவின் 2-வது கணவர் சந்திரா லே-அவுட் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவுசெய்து விசாரித்து வருகிறார்கள்.

மேலும் இதுபற்றி அவர்கள் உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட போலீஸ்காரர் ராகவேந்திராவை பணியிடை நீக்கம் செய்து உயர் போலீஸ் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

1 More update

Next Story