பீடி கொடுக்க மறுத்ததால் இளைஞரை கத்தியால் குத்திய சிறுவன்

வழக்குப்பதிவு செய்த போலீசார் , சிறுவனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
டெல்லி,
தலைநகர் டெல்லியின் நொய்டா லிங்க் ரோடு பகுதியை சேர்ந்த இளைஞர் கிருஷ்ண ஷஹானி. இவர் நேற்று மாலை ஆள்நடமாட்டமற்ற பகுதியில் நின்றுகொண்டிருந்தார்.
அப்போது அங்கு கஞ்சா போதையில் வந்த 16 வயது சிறுவன், கிருஷ்ண ஷஹானியிடம் பீடி கொடுக்குமாறு கேட்டுள்ளான். அப்போது தன்னிடம் பீடி இல்லை என்று கிருஷ்ணா கூறியுள்ளார். இதைக்கேட்டு ஆத்திரமடைந்த சிறுவன் தான் மறைத்து கொண்டு வந்த கத்தியால் கிருஷ்ணாவை சரமாரியாக குத்தினான். இந்த தாக்குதலில் படுகாயமடைந்த கிருஷ்ணாவை அக்கம்பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறுவனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story






