13 பைக்குகளை திருடிய சிறுவர்கள்... காரணம் கேட்டு அதிர்ந்த போலீசார்

கோப்புப்படம்
புகாரின் பேரில் மொத்தம் 110 இடங்களில் உள்ள சிசிடிசி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.
தானே,
மராட்டிய மாநிலம் நவி மும்பையில் பைக் திருட்டு தொடர்ந்து நடைபெறுவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. இந்த புகாரின் பேரில் போலீசார் பைக் திருடுபோன இடங்களில் உள்ள சிசிடிவி காட்சிகளை தீவிரமாக ஆய்வு செய்தனர்.
மொத்தம் 110 இடங்களில் உள்ள சிசிடிசி காட்சிகளை ஆய்வு செய்த பின்னர் போலீசார் ஆதிர்ச்சியடைந்தனர். அதில் இரண்டு சிறுவர்கள் பைக் திருட்டில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. அந்த இரண்டு சிறுவர்களையும் மடக்கி பிடித்த போலீசார் அவர்களிடம் விசாரணை செய்தனர். இந்த விசாரணையில் திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்தன. அந்த சிறுவர்கள் இதுவரை மொத்தம் 13 பைக்குளை திருடியது தெரியவந்தது.
சிறுவர்கள் பணத்திற்காக அல்ல, ஜாலிக்காக மட்டுமே இந்த திருட்டை செய்ததாக கூறப்படுகிறது. மேலும் அவர்கள் பெட்ரோல் தீரும் வரை பைக்கில் பயணம் செய்து விட்டு அதை அங்கேயே விட்டு சென்று விடுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த திருட்டில் ஈடுபட்ட 15 மற்றும் 17 வயது சிறுவர்களின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் சிறார் நீதிச் சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கைகளுடன் அந்த சிறுவர்களுக்கு ஆலோசனை வழங்கப்படும் என அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.






