தேர்தல் கமிஷனர்கள் நியமனம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு


தேர்தல் கமிஷனர்கள் நியமனம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
x
தினத்தந்தி 13 Feb 2025 2:15 AM IST (Updated: 13 Feb 2025 10:08 AM IST)
t-max-icont-min-icon

தலைமை தேர்தல் கமிஷனர் 18-ந் தேதி ஓய்வு பெறவுள்ளதால், புதிய சட்டப்படி உடனடியாக புதிய கமிஷனர் நியமிக்கப்படலாம் என்று மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

புதுடெல்லி,

மத்திய அரசின் புதிய சட்டத்தின் கீழ் தலைமை தேர்தல் கமிஷனர்கள் மற்றும் தேர்தல் கமிஷனர்களின் நியமனத்திற்கு எதிராக ஜனநாயக சீர்த்திருத்தங்களுக்கு எதிரான சங்கம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இதுதொடர்பான மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் சூர்ய காந்த், என்.கோடீஸ்வர் சிங் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தத மனுதாரர்கள் சார்பில் மூத்த வக்கீல் பிரசாந்த் பூஷண் ஆஜராகி, இந்த வழக்கை உடனடியாக விசாரணைக்கு எடுக்க வேண்டும் என்றார். இதைக்கேட்ட நீதிபதிகள், இந்த வழக்கு வருகிற 19-ந் தேதி விசாரணக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று கூறினர்.

தலைமை தேர்தல் கமிஷனர் 18-ந் தேதி ஓய்வு பெறவுள்ளதால், புதிய சட்டப்படி உடனடியாக புதிய கமிஷனர் நியமிக்கப்படலாம் என்று மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதைக்கேட்ட நீதிபதிகள், இடைக்காலத்தில் ஏதாவது நடந்தால், விளைவுகள் கண்டிப்பாக பின்பற்றப்படும் என்று கூறி, விசாரணையை 19-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

1 More update

Next Story