7 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை; சமஸ்கிருத ஆசிரியர் மீது வழக்குப்பதிவு

சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது ஏற்கனவே சில மாணவிகள் பாலியல் புகார் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
புவனேஸ்வர்,
ஒடிசா மாநிலம் சுந்தர்கர் மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் பணிபுரிந்து வந்த 36 வயது சமஸ்கிருத ஆசிரியர் மீது, அதே பள்ளியைச் சேர்ந்த 7 மாணவிகள் பாலியல் புகார் அளித்துள்ளனர். அந்த பள்ளியின் தலைமை ஆசிரியையிடம் மாணவிகள் தங்கள் புகாரை தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து தலைமை ஆசிரியர் இது குறித்து உடனடியாக காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். இதற்கிடையில், சம்பந்தப்பட்ட சமஸ்கிருத ஆசிரியர் பள்ளியில் விடுமுறை கடிதம் கொடுத்துவிட்டு தலைமறைவாகிவிட்டார். அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதனிடையே, சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது ஏற்கனவே சில மாணவிகள் பாலியல் புகார் கூறியதாகவும், அவரை பள்ளி நிர்வாகம் கண்டித்து அனுப்பியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story






