’சாட்ஜிபிடி கோ’ இன்று முதல் ஓராண்டுக்கு இலவசம்: இந்திய பயனர்களுக்கு ஓபன் ஏஐ நிறுவனம் சலுகை

‘ஓபன் ஏஐ’ நிறுவனம் தனது பிரத்யேக ‘சாட்ஜிபிடி கோ’ சந்தா சேவையை இந்திய பயனாகளுக்கு ஓராண்டுக்கு முற்றிலும் இலவசமாக வழங்கப் போவதாக அறிவித்தது.
’சாட்ஜிபிடி கோ’ இன்று முதல் ஓராண்டுக்கு இலவசம்: இந்திய பயனர்களுக்கு ஓபன் ஏஐ நிறுவனம் சலுகை
Published on

புதுடெல்லி,

ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தளங்கள் தற்போது இணைய உலகில் பெரும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. சாட்ஜிபிடி, கூகுளின் ஜெமினி, எக்ஸ் தளத்தின் குரோக், பிரெப்ளெக்சிட்டி உள்ளிட்ட ஏஐ நிறுவனங்கள் சந்தையில் முன்னணியில் உள்ளன. போட்டியை சமாளிக்கவும் வாடிக்கையாளர்களை கவரவும் ஏஐ நிறுவனங்கள் பல்வேறு சலுகைகள் அறிவித்து வருகின்றன.

அந்த வகையில், ஓபன் ஏஐ நிறுவனம் தனது பிரத்யேக சாட்ஜிபிடி கோ சந்தா சேவையை இந்திய பயனாகளுக்கு ஓராண்டுக்கு முற்றிலும் இலவசமாக வழங்கப் போவதாக அறிவித்தது. அதன்படி, இந்த இலவச சேவை இன்று முதல் ஓராண்டுக்கு இலவசமாக கிடைக்கும். இதற்கு முன்பு வரை மாதம் ரூ. 399 க்கு சாட்ஜிபிடி கோ சேவை கிடைத்து வந்தது. இலவசமாக கிடைக்கும் சாட்ஜிபிடி வெர்ஷனை விட இந்த, வெர்ஷனில் கூடுதல் தரவுகள், புகைப்படங்கள், வரைவுகள் உள்ளிட்டவற்றை அதிவேகமாக பெற முடியும்.

பெங்களூரில் இன்று ஓபன் ஏஐ நடத்தவுள்ள சிறப்பு நிகழ்வைக் கொண்டாடும் விதமாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தச் சலுகை மூலம், மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு (ஏஐ) சேவையை இந்தியாகள் அதிக அளவில் எளிதில் அணுகிப் பயன்பெற முடியும் என்று ஓபன்ஏஐ நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com