உத்தர பிரதேசத்தில் குளிர் அலை: பள்ளிகளுக்கு 5-ந்தேதி வரை விடுமுறை நீட்டிப்பு


உத்தர பிரதேசத்தில் குளிர் அலை: பள்ளிகளுக்கு 5-ந்தேதி வரை விடுமுறை நீட்டிப்பு
x

குளிர் அலையின் தாக்கம் இன்னும் குறையாததால் பள்ளிகளுக்கான விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது.

லக்னோ,

இந்தியாவின் வடமாநிலங்களில் தற்போது கடும் குளிர் வாட்டி எடுத்து வருகிறது. பகல் நேரங்களிலும் அடர்த்தியான பனிமூட்டம் நிலவுகிறது. அந்த வகையில், உத்தர பிரதேச மாநிலத்தில் நிலவி வரும் கடுமையான பனிப்பொழிவு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

கிரேட்டர் நொய்டா, காசியாபாத், மதுரா உள்ளிட்ட நகரங்களில் அதிக பனிமூட்டம் காணப்படுகிறது. குளிர் அலை காரணமாக உத்தர பிரதேச மாநிலத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. முன்னதாக உத்தர பிரதேசத்தில் 12-ம் வகுப்பு வரையிலான அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் 1-ந்தேதி வரை விடுமுறை விடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

விடுமுறை முடிந்து பள்ளிகள் 2-ந்தேதி(இன்று) முதல் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், குளிர் அலையின் தாக்கம் இன்னும் குறையாததால் உத்தர பிரதேசத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் வரும் 5-ந்தேதி வரை விடுமுறையை நீட்டித்து அந்த மாநிலத்தின் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

1 More update

Next Story