‘லிப்ட்’ கொடுப்பதுபோல் நடித்து கல்லூரி மாணவி பலாத்காரம்: வாலிபர் கைது


‘லிப்ட்’ கொடுப்பதுபோல் நடித்து கல்லூரி மாணவி பலாத்காரம்: வாலிபர் கைது
x

கல்லூரி முடிந்து வீட்டுக்கு வருவதற்காக பஸ்சுக்காக கல்லூரி மாணவி காத்து நின்றார்.

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் சிக்பள்ளாப்பூர் மாவட்டம் பெரேசந்திரா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட கிராமத்தில் ஒரு கல்லூரி மாணவி வசித்து வருகிறார். தந்தையை இழந்த அவர் பாகேப்பள்ளி தாலுகாவில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இதனால் இவர் தினமும் பஸ் மூலம் கல்லூரிக்கு சென்று வருவது வழக்கம்.

இந்நிலையில் சம்பவத்தன்று மாலை கல்லூரி முடிந்து வீட்டுக்கு வருவதற்காக பெரேசந்திரா கிராஸ் அருகே பஸ்சுக்காக கல்லூரி மாணவி காத்து நின்றார். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த சிக்பள்ளாப்பூரை சேர்ந்த கணேஷ்(வயது 29) என்பவர் மாணவிக்கு ‘லிப்ட்’ கொடுப்பதாக கூறினார். அதை நம்பிய மாணவியும், கணேசின் மோட்டார் சைக்கிளில் ஏறினார். அதையடுத்து கணேஷ் மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்றார்.

கணேஷ் திடீரென ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த கல்லூரி மாணவி, கணேசிடம் அதுபற்றி கேட்டுள்ளார். அப்போது மோட்டார் சைக்கிளை நிறுத்திய கணேஷ், மறைத்து வைத்திருந்த பீர் பாட்டிலால் அந்த கல்லூரி மாணவியை சரமாரியாக தாக்கினார்.

இதில் நிலைகுலைந்த அந்த கல்லூரி மாணவி மயங்கினார். அதையடுத்து கணேஷ், கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து விட்டு அங்கிருந்து தப்பிச்சென்றுவிட்டார். பின்னர் மயக்கம் தெளிந்த கல்லூரி மாணவி, தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து தனது நண்பர்களுக்கு செல்போன் மூலம் தெரிவித்தார்.

அதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் போலீசார் கணேசை வலைவீசி தேடினர். மேலும் மாணவியை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இதற்கிடையே கணேஷ் இருக்கும் இடத்தை போலீசார் கண்டுபிடித்தனர். பின்னர் சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் கணேசை சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர். பின்னர் அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

1 More update

Next Story