5 மாநில சட்டசபை தேர்தல்கள்; காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பார்வையாளர்கள் விவரம் வெளியீடு

தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு முகுல் வாஸ்னிக், உத்தம் குமார் ரெட்டி மற்றும் காஜி முகமது நிஜாமுதீன் ஆகிய 3 பேர் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.
புதுடெல்லி,
நாட்டில் தமிழகம், புதுச்சேரி, அசாம், கேரளா மற்றும் மேற்கு வங்காளத்தில் நடப்பு ஆண்டில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு பல்வேறு கட்சிகளும் தீவிர அரசியல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், சட்டசபை தேர்தலை முன்னிட்டு 5 மாநிலங்களுக்கான தேர்தல் பார்வையாளர்கள் அடங்கிய குழுவினரை காங்கிரஸ் கட்சி அறிவித்து உள்ளது.
இதன்படி, தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு முகுல் வாஸ்னிக், உத்தம் குமார் ரெட்டி மற்றும் காஜி முகமது நிஜாமுதீன் ஆகிய 3 பேரும், கேரளாவுக்கு சச்சின் பைலட், கே.ஜே. ஜார்ஜ், இம்ரான் பிரதாப்கார்ஹி மற்றும் கன்னையா குமார் ஆகிய 4 பேரும் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.
இதேபோன்று அசாமுக்கு பூபேஷ் பாகல், டி.கே. சிவக்குமார் மற்றும் பந்து திர்கே ஆகிய 3 பேரும் மற்றும் மேற்கு வங்காளத்திற்கு சுதீப் ராய் பர்மன் மற்றும் ஷகீல் அகமது கான் ஆகிய 2 பேரும் நியமிக்கப்பட்டு உள்ளனர். இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது.






