ஓடும் பைக்கில் காதல் ஜோடி சில்மிஷம் - வீடியோ வைரலான நிலையில் அபராதம்

ஆபத்தான முறையில் பயணம் செய்த ஜோடிக்கு போலீசார் ரூ. 53,500 அபராதம் விதித்துள்ளனர்.
லக்னோ,
உத்தரப் பிரதேச மாநிலத்தில் பைக்கில் காதல் ஜோடி ஒன்று ஆபத்தான முறையில் பயணம் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பிரோசாபாத்தில் உள்ள சாலை ஒன்றில் இரவு நேரத்தில் இளம்பெண் ஒருவர் பைக்கின் முன் பக்கம் படுத்தபடி, தனது காதலனுடன் ஆபத்தான முறையில் பயணித்துள்ளார்.
இதனைப் பார்த்த சக வாகன ஓட்டிகள் தட்டிக்கேட்டுள்ளனர். அதற்கு அந்த பெண், "நீங்கள் யார் இதை கேட்பதற்கு?" என திட்டியுள்ளார். இந்த வீடியோ வைரலான நிலையில், அந்த ஜோடி மீது நடவடிக்கை எடுக்க பலரும் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் பைக்கில் ஆபத்தான முறையில் பயணம் செய்த ஜோடிக்கு போலீசார் ரூ. 53,500 அபராதம் விதித்துள்ளனர்.
Related Tags :
Next Story






